வில்லங்க பேராசிரியர்

கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் ‘சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல்’ துறையின் உதவி பேராசிரியரான கில்பர்ட் செபாஸ்டியன், 2014ல் பா.ஜ.க அட்சி அமைந்த பின்னர் பாரதம் ஒரு பாசிச நாடாகிவிட்டதாக கூறி தனது பா.ஜ.க மீதான வன்மத்தை கல்வியை கற்கும் மாணவர்களிடம் திணித்துள்ளார். கடந்த ஏப்ரல் 19ல் ‘அரசியல் அறிவியலின் கோட்பாடுகள் மற்றும் கருத்துக்கள்’ என்ற தலைப்பில் நடந்த விரிவுரையின்போது அவர்  இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

கேரள மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் சி.யு.கே பிரிவு, அக்கல்லூரி துணைவேந்தர் எச். வெங்கடேஷ்வருலுவுக்கு எழுதிய கடிதத்தில், ‘எந்த ஒரு உண்மையான ஆய்வும் பாரதத்தை ஒரு பாசிச நாடாக அடையாளப்படுத்தவில்லை. சில தேச விரோத சக்திகள் மட்டுமே பாரதம் ஒரு பாசிச நாடு என்று முத்திரை குத்த முயற்சிக்கின்றன’ என்று கூறியுள்ளது. மேலும், பேராசிரியர் கில்பர்ட் செபாஸ்டியன் மீது  துணைவேந்தர் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களைத் திரட்டி வெகுஜன போராட்டங்களை நடத்தப்போவதாகவும் ஏ.பி.வி.பி தெரிவித்துள்ளது.

ஏ.பி.வி.பியின் கடும் எதிர்ப்பினை அடுத்து, துணைவேந்தர் ‘இது குறித்து விசாரிக்க மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும்’ என செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். தேசம் முழுவதும் உள்ள பல கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் இட்துசாரி எண்ணம் கொண்ட பேராசிரியர்கள், திட்டமிட்டே மாணவர்களிடம் பொய்களைப் பரப்புவதற்கும், தேச விரோத எண்ணங்களை பரப்புவதும் இது முதல் முறை அல்ல.