முதல்வர்களுக்கு ஒரு முன்னுதாரணம்

மக்கள் நலன் காப்பதில் ஒரு மாநில முதல்வர் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் மற்ற மாநில முதல்வர்களுக்கு ஒரு முன்னுதாரனமாகத் திகழ்கிறார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். ரௌடிகளை அடக்குவது, சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, மிக வேகமான மாநில முன்னேற்றம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாழ்க்கைக்கான வாய்ப்பு ஏற்படுத்தித்தருவது என பல விஷயங்களில் அவரின் செயல் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கொரோனா இரண்டாவது அலையின்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க, கொரோனா மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிப்பதுடன், டி.ஆர்.டி.ஓவின் உதவியுடன், 220 சிலிண்டர்கள் திறன் கொண்ட புதிய ஆக்ஸிஜன் ஆலை மிக வேகமாக நிறுவப்பட்டு அடுத்த இரண்டு நாட்களில் செயல்பாட்டிற்கு கொண்டுவரவுள்ளார் அவர். மேலும், மாநிலத்தில் எந்தவொரு மருத்துவக் கல்லூரியும் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு, அந்தந்த கல்லூரிக்கு அதன் சொந்த ஆக்ஸிஜன் ஆலை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆக்ஸிஜனை ஏற்றிச்செல்லும் அனைத்து வாகனங்களும் ஜி.பி.எஸ் கண்காணிப்பு, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். என அவர் அறிவித்துள்ளார்.

முக்கியமாக, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் கொரோனா மருந்துகளை சட்டவிரோதமாக பதுக்குபவர்கள் கள்ளசந்தை விற்பனையாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் கேங்க்ஸ்டர் சட்டம் பாயும் என தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டம், ஒரு நபரை 12 மாதங்கள் வரை சிறையில் வைக்க அனுமதிக்கிறது, அதே நேரத்தில் உ.பியின் கேங்க்ஸ்டர் சட்டம், குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய காவல்துறைக்கு அதிகாரம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.