பயங்கரவாத எதிர்ப்பு மசோதா

முஸ்லிம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுல் பிரான்சும் ஒன்று. பிரான்சில் பயங்கரவாதியால், வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெட்டி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து இவ்விவகாரம் பெரிதானது. இதனையடுத்து இதற்காக சட்டம் இயற்றப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார். தற்போது அந்த சட்ட மசோதா பிரான்ஸின் கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தில், ‘ஆன்லைனில் வெறுப்பை பரப்பும் நபரை உடனடியாக கைது செய்ய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும். குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 45,000 யூரோ அபராதமும் விதிக்கப்படும். மேலும், தனியார், பொது அலுவலகங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை. கன்னித்தன்மை சான்றிதழ் தடை. பலதார மணம் ஒழிப்பு, கட்டாய திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி. குழந்தைகள் வழக்கமான பள்ளியில் சேருவதை உறுதிசெய்தல். மூளைச் சலவை செய்வது, மூட நம்பிக்கைகள் பரப்பப்படுவதை தடுத்தல். மதச்சார்பின்மைக்கு பயிற்சி அளித்தல். அரசு ஊழியரை அச்சுறுத்துபவர்களுக்கு சிறைத் தண்டனை போன்ற ஷரத்துகள் இடம்பெற்றுள்ளன.