கோயில்கள் குறித்து ஜக்கி வாசுதேவ்

‘அறநிலையத்துறை கணக்காய்வு அறிக்கையின்படி கடந்த 25 ஆண்டுகளில் 1,200 தொன்மையான சிலைகள் திருடப்பட்டுள்ளன. கோயில்களை பேராசையின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். சுமார் 50,000 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தமிழ் கலாச்சாரத்தின் மையம் கோயில். தமிழ்நாட்டின் சின்னம் கோயில். தமிழ் மக்களின் இதயமே கோயில்தான். தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோயில்கள் சிதிலமடைந்து வருவது, அவை கவனிப்பின்றி அக்கறையின்றி நடத்தப்படுவதை காட்டுகிறது. கோயில் பூசாரிகள் சம்பளம் சொர்ப்பமாக இருப்பதால், வேறு வழிகளில் வருவாய் ஏற்படுத்திக்கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். வறுமையில் வாடுதல் பக்திக்கான தகுதியில்லை. சுயமாக தங்களை பாதுகாவலர்களாக நியமித்து கொண்டுள்ளவர்களை விட, திருடர்களுக்கு இச்சிலைகளின் மதிப்பு தெரிகிறது போலும். தனக்கு அர்ப்பமாய் தெரியும் ஒன்றினை, அரசு தன்வசம் வைத்திருக்கக் கூடாது. தமிழக கோயில்களை விடுவிப்பதுதான் அவற்றை காப்பாற்ற ஒரே வழி’ என சமீபகாலமாக கோயில்களை அரசின் பிடியில் இருந்து மீட்க ஈஷா மையத்தின் நிறுவனரும் ஆன்மிக குருவுமான ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்து வருகிறார். நடிகர் சந்தானமும் இதற்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார். தற்போது ஜக்கி வாசுதேவின் இக்கருத்தை மக்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.