அமெரிக்கா பாராட்டு

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், ‘பாரதத்தின் ஜனநாயக மாண்புகளுக்கு உட்பட்டு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், பொருளாதார, அரசியல் சகஜநிலை ஏற்படுவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம். ஜம்மு காஷ்மீர் தொடர்பான எங்கள் நிலையில், எந்த மாற்றமும் இல்லை. அங்கு நடக்கும் முன்னேற்றங்களை கண்காணித்து வருகிறோம். பாரதத்துடன் எங்கள் நட்பு மிகவும் வலுவாக உள்ளது. மேலும் பாரதத்தின் பாதுகாப்பு, இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அதை உறுதி செய்வதற்காக அதிநவீன ஆயுதங்களை வழங்கி வருகிறோம்’ என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.