மோடிக்கு ‘செராவீக்’ விருது

செராவீக் எனப்படும் ஆற்றல், சுற்றுச்சூழல் இணைய வழி மாநாடு, அமெரிக்காவில் நடைபெற்றது. இம்மாநாட்டில், ‘செராவீக் குளோபல் எனர்ஜி அண்டு என்வைராண்மென்ட் லீடர்ஷிப் அவார்ட்’ எனப்படும், ஆற்றல், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கும் சர்வதேச தலைவருக்கான விருதை நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவித்தது. விருதை பெற்றுக்கொண்ட மோடி, ‘பருவநிலை மாற்றம், பேரிடர்கள் உலகிற்கு பெரிய சவால்களாக உள்ளன. கொள்கைகள், சட்டங்கள் வாயிலாக இவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை வரும் 2030க்குள் பாரதம் அடைந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’ என தெரிவித்தார்.