ரம்ஜான் அன்று தேர்வுகள் இல்லை

மத்திய மாநில அரசுகள் ரம்ஜான் விடுமுறை நாளான மே 14ஐ அறிவித்துள்ளன. ஆனால், பிறை தென்படுவதில், உள்ள மாற்றங்களை பொறுத்து தேதியில் மாற்றம் இருக்கும். இந்நிலையில், 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளுக்கான தேதிகளை மே13,15 ஆகிய தேதிகளில் சி.பி.எஸ்.இ அறிவித்திருந்தது. எனவே இதனை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசனிடமிருந்து வந்த கோரிக்கையை அடுத்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தேதிகளை மாற்ற அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் சி.பி.எஸ்.இ உடனடியாக தேதிகளை மாற்றி புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.