சாவர்க்கரின் தேசபக்தி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் சென்றார். தேசிய நினைவு சிறைச்சாலைக்கு சென்ற அமித் ஷா, அங்குள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கு சென்று பார்வையிட்ட அமித் ஷா, அங்கிருந்த சாவர்க்கர் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

அப்போது பேசிய அவர், ‘இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் எண்ணை பிழிந்தெடுக்கும் பணியில் கொடுமைப்படுத்தப்பட்ட ஒரு நபரின் வாழ்க்கையை எவ்வாறு சந்தேகிக்க முடியும்? சிறப்பான வாழ்க்கை வாழ அனைத்து வழிகளும் இருந்தும் சாவர்க்கர் கடினமான பாதையே தேர்ந்தெடுத்தார். இது தாய்நாட்டின் மீதான அவரின் அசைக்க முடியாத பற்றை எடுத்துக் காட்டுகிறது. அவ்வகையில், அவர் 10 ஆண்டுகள் அடைக்கப்பட்ட செல்லுலார் சிறைக்கு வருவது புனித யாத்திரை.

இது மஹா தீர்த்த பூமி. ‘வீர்’ என்ற பட்டம் அவருக்கு அரசு கொடுக்கவில்லை. அவரின் துணிச்சலை பாராட்டி கோடானுகோடி மக்கள் அளித்தனர். எனவே, வீர சாவர்க்கரின் தேசப்பற்றையும் வீரத்தையும் யாரும் சந்தேகிக்க முடியாது. சந்தேகிப்பவர்கள் வெட்கப்பட வேண்டும்’ என கூறினார்.