கடற்படை தளபதி பேச்சு

நமது பாரதம் அதன் முதல் விமானந்தாங்கிக் கப்பலான விக்ராந்தை சுமார் 23,000 கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது. அப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்கிடம் ஊடக நிருபர் ஒருவர், உள்நாட்டு விமானந்தாங்கி கப்பல்கள் வீண் செலவு என கூறி, பலர் எதிர்க்கிறார்கள். இதில் உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கரம்பீர் சிங், உள்நாட்டு விமானந்தாங்கி கப்பல்கள் ஒரு போதும் வீண் செலவல்ல. விக்ராந்தின் கட்டுமானம் மூலமாக 550 நிறுவனங்கள் மற்றும் 100 சிறு குறு உருவாகி உள்ளன.

இதில் பயன்படுத்தப்பட்ட இரும்பு முழுக்க பாரதத் தயாரிப்பு. இவற்றின் காரணமாக பல்லாயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன. மேலும், கடல் பகுதிகளில் வான் பாதுகாப்புக்கு விமானப்படை விமானங்களை நம்பி ஒரு கடற்படை கடலில் இயங்க முடியாது. ஆனால், விமானந்தாங்கி கப்பல்கள் இந்த வான் பாதுகாப்பை வழங்குகின்றன. எனவே,  விமானந்தாங்கி கப்பல்கள் இன்றைய சூழலில் இன்றியமையாதது. எனவே, இதனை வீண் செலவு என ஒருபோதும் சொல்லமுடியாது என பதிலளித்தார்.