அப்துல் கலாம் பிரேரனா மையம்

முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 90வது பிறந்த தினத்தை முன்னிட்டும், நாட்டின் 75வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை குறிக்கும் விதமாகவும், விசாகப்பட்டினத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டி.ஆர்.டி.ஓ’வின் கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் ‘டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிரேரனா மையம்’ திறந்து வைக்கப்பட்டது.

கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் தயாரிப்புகளான இம்மையத்தில், வருணாஸ்திரா, டார்பிடோ அட்வான்ஸ்ட் லைட் மற்றும் மாரீச் டெகாய் ஆகிய கடற்படை ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. டாக்டர் கலாமின் சிலை ஒன்றையும் டி.ஆர்.டி.ஓ’வின் கடற்படை அமைப்புகள் மற்றும் பொருட்கள் பிரிவின் தலைமை இயக்குநர் டாக்டர் சமீர் வி காமத் திறந்து வைத்தார்.