ரஷ்ய உக்ரைன் எல்லைப் பதற்றம்

ஒருங்கிணைந்த ரஷ்யா பல நாடுகளாக உடைந்து சிதறியதில் இருந்தே இன்றைய ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அவ்வப்போது எல்லைப்பிரச்சனை நடந்துகொண்டுதான் உள்ளது. இந்த எல்லைப் பிரச்சனையில் கடந்த 2014 முதல் தற்போதுவரை 13,000 பேர் இறந்துள்ளனர், 24,000 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வருடம் மட்டும் உக்ரைனின் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் 57 பேர் காயமுற்றதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது. சமீப காலமாக ரஷ்யா கிரிமியன் எல்லைப்பகுதியில் தனது துருப்புகளை எல்லையை ஒட்டி நகர்த்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது உக்ரைன். இது எங்கள் எல்லை. எங்கள் எல்லைக்குள் நாங்கள் எப்படி வேண்டுமென்றாலும் துருப்புகளை நகர்த்த உரிமை உள்ளது. நாங்கள் எல்லை மீறவில்லை என ரஷ்யா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனுடன் இணைந்து நேட்டோ நாடுகள் மேற்கொள்ள உள்ள போர் ஒத்திகை பயிற்சிகள் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும். இதனை அந்த நாடுகள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.