ரயில்வே 1,000 கோடி திட்டம்

பயணிகளின் வசதி, பாதுகாப்பிற்காக, தமிழகத்தில், ரூ. 23.32 கோடி செலவில் அம்பத்தூர், திருப்பூர், மேட்டுப்பாளையம், வாஞ்சி மணியாச்சி உள்ளிட்ட 10 இடங்களில் நடை மேடைகள், ரூ. 16.61 கோடி செலவில் மாம்பலம், தம்பரம் உள்ளிட்ட ஆறு ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள், ரூ.2.38 கோடி செலவில் கோவை, நாகர்கோயிலில் லிப்ட் வசதிகள், வீடியோ கண்காணிப்பு அமைப்புகள் என தமிழகம், கேரளாவிற்கான சுமார் 1,000 கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாட்டிற்கு அர்பணித்தார். அப்போது பேசுகையில், ‘அடுத்த 2 1/2 ஆண்டுகளில், தமிழக ரயில்வை முழுவதும் மின்மயமாக்கப்படும். ரயில் நிலையங்களில் 100% எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு வரும் பயணிகள் வசதிக்காக முதல் செங்குத்து பாலமான பம்பன் பாலத்தையும் நாங்கள் நிர்மாணித்து வருகிறோம் என கூறினார்.