முஸ்லிம்களை மிரட்டும் பி.எப்.ஐ

அயோத்தியில் அமையவுள்ள ஸ்ரீராமர் கோயிலுக்கு நன்கொடை வழங்கும் முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது கர்நாடக ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பு. இந்த பேரணியில் பேசிய அனீஸ் அஹமது, ஸ்ரீராமர் கோயிலுக்கு எதிராகக் கடுமையான சொற்களை முன்வைத்ததோடு, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க குறித்தும் ஆத்திரமூட்டும் வகையில் பேசினார். இதனையடுத்து, கர்நாடக உள்துறை அமைச்சர் பாசவராஜ் பொம்மை, பி.எப்.ஐ தலைவர் மீது உரிய வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.