ராகுலின் விதேசி பற்று

பாரதத்தை சேர்ந்த தொழிலதிபர்களை குறிவைப்பதும், அவர்களைத் தாக்கி பேசுவதும்தான் பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிப்பதற்கான சிறந்த உத்தி என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார் போல தெரிகிறது. அம்பானி, அதானி போன்ற நண்பர்களுக்காக மட்டுமே மோடி அரசு பணியாற்றுவதாக இடைவிடாமல் குற்றம் சாட்டிய ராகுல் தற்போது குறிவைத்திருப்பது பாரத் பயோடெக்கின் ஆதார் பூனாவாலாவுக்கு. தடுப்பூசி தயாரிப்பாளர்கள் அதிக லாபம் ஈட்ட உதவும் வகையில் மோடி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என குற்றம் சாட்டுகிறார் ராகுல்.

ஆனால், ரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை மத்திய அரசு அங்கீகரித்தபோது அது தன்னால்தான் நடந்ததாக பெருமை தேடிக்கொண்டார். மேலும், ஃபைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட விலையுயர்ந்த அமெரிக்க தடுப்பூசிகளை அனுமதிக்க வேண்டும் என அவர்களுக்கு ஆதரவாக லாபி செய்தவரும் இதே ராகுல்தான். இவர்தான் இப்போது சுதேசி நிறுவனங்களுக்கு எதிராக கொடி பிடிக்கிறார்.

இந்நிலையில், சி.என்.பி.சி-டிவி 18 க்கு அளித்த சமீபத்தில் பேட்டியளித்த ஆதார் பூனவாலா, ‘நாங்கள் தொற்றுநோயைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க முயலவில்லை. எங்கள் தயாரிப்பில் 50 சதவீதத்தை அஸ்ட்ராசெனெகாவுக்கு ராயல்டியாக செலுத்த வேண்டும். இதனால், ஒரு டோஸுக்கு ரூ. 150 இழப்பை நாங்கள் தற்போது சந்தித்து வருகிறோம்’ என கூறியுள்ளார்.