பஞ்சாப் புதிய அத்தியாயம்

முதன்முறையாக, பஞ்சாப் விவசாயிகள் தங்கள் கோதுமை விற்பனைக்கு நேரடியாக தங்கள் வங்கிக் கணக்குகளில் பணம் பெறத் தொடங்கியுள்ளனர். இதுவரை சுமார் ரூ. 8,180 கோடி ஏற்கனவே பஞ்சாப் விவசாயிகளின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ரபி பருவ அறுவடைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில், அரசு விவசாயிகளிடம் இருந்து கோதுமையை பெற்று அதற்கான மானியத்தை நேரடியாகவே அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தி வருகிறது. இதனால் இடைத்தரகர்களின் சுரண்டல் இன்றி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், சண்டிகர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர்.