பொது சிவில் சட்டம் தேவை

நாடு முழுவதும் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முலாயம் சிங் யாதவின் தம்பியான ஷிவ்பால் சிங் யாதவ் கூறியுள்ளார். இது, சமாஜ்வாதி கட்சியில் மட்டுமில்லாமல் உத்தரப் பிரதேசத்திலும் பல அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ஒரு காலத்தில் முலாயம் சிங் யாதவுடன் கை கோர்த்து முஸ்லிம்களை தாஜா செய்து அவர்களை முன்நிறுத்தி சமாஜ்வாதி கட்சியை வளர்த்தவர் ஷிவ்பால் யாதவ். இப்பொழுது அதே முஸ்லிம்கள் எதிர்க்கும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற கூறியுள்ளார் இவர். அகிலேஷ் யாதவ் கைகளில் சமாஜ்வாதி கட்சி சென்ற பிறகு அதில் இருந்து விலகி பிரகதிஷீல் சமாஜ்வாதி பார்ட்டி என்ற பெயரில் கடந்த 2018ல் தனிக்கட்சி ஆரம்பித்தார். 2019 மக்களவைத் தேர்தலில் தனது பலத்தை நிரூபித்தார். யாதவர்களிடையே அகிலேஷ் யாதவைவிட செல்வாக்கு பெற்றவர் ஷிவ்பால் யாதவ்.  முலாயம் சிங் யாதவ், ஷிவ்பால் யாதவை சமாதானப்படுத்தி சமீபத்தில் நடைபெற்ற உத்தரப் பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி காட்சிக்காக வேலை செய்ய வைத்தார். இவரால்தான் சமாஜ்வாதி கட்சி தற்போது 111 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு ஷிவ்பால் யாதவை மீண்டும் ஓரம் கட்டினார் அகிலேஷ் யாதவ். இதனையடுத்து ஷிவ்பால் யாதவ் உத்தரப் பிரதேச முதல்வர் யோகியின் வீடு தேடி சென்று சந்தித்து பேசினார் என்பது நினைவு கூரத்தக்கது.