சிறப்புடன் வாழவைக்கும் சித்ரா பௌர்ணமி

இன்று (16-04-2022 ) சித்ரா பவுர்ணமி தினம். அதாவது தமிழ் மாதத்தில் முதல் மாதமான சித்திரை 3ம் தேதி. மரணக் கடவுளான எமனின் அதிகாரப்பூர்வ புத்தகக் காப்பாளரான சித்ர குப்தப் பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நாள். சித்ர குப்தர் இந்த நாளில் பிறந்தார் என்று கருதப்படுகிறது. மனிதராக பிறந்த அனைவரின் அனைத்து நல்ல மற்றும் கெட்ட செயல்களின் பதிவுகளை சித்ரகுப்தர் வைத்திருப்பதாகவும், அதற்கான நடவடிக்கையை எடுக்கும் சிவபெருமானிடம் அவற்றை அவர் விவரிப்பதாகவும் நம்பப்படுகிறது.

இன்று மக்கள் அவருக்குப் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இன்று இவரை வழிபடுவதால் நீண்ட ஆயுளும், நோய்நொடி இல்லாத வாழ்வும் பக்தர்கள் கிடைக்கப் பெறுவார்கள். சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.  அனைத்து சிவாலயங்களிலும் மிகவும் விசேஷமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் இன்று செய்யப்படுகின்றன. மற்ற எந்த பௌர்ணமி தினங்களை காட்டிலும் விசேஷ சிறப்புகள் வாய்ந்த இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று, கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு நம்மால் முடிந்த தான, தர்மங்கள் செய்வதால் நமக்கு அனைத்து வித நன்மைகளும், சுபிட்சங்களும் ஏற்படும்.

வைணவ கோயில்கள் மற்றும் இதர தெய்வங்களின் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள், விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.  மேலும் இன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

ஆர். கிருஷ்ணமூர்த்தி