ஹிந்து சிலைகளை விற்க தடை

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் அருகில் உள்ள நாடு டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு. இந்நாட்டில் கிறிஸ்தவர்களும் ஹிந்துக்களும் அதிகம் வசிக்கின்றனர். முஸ்லிம்கள் 4.3 சதவீதம் வாழ்கின்றனர். இங்குள்ள பிரைஸ் கிளப் சூப்பர் மார்க்கெட்டில் பல ஆண்டுகளாக ஹிந்து வழிபாட்டு சிலைகள், பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் உரிமையாளர் காசிம் அலி, அஞ்சுமன் சுன்னத்துல் ஜமாத் சங்கத்தின் துணைத்தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், ஜமாத்தின் தலைவர் இம்தியாஸ் அலி என்பவர் காசிம் அலிக்கு எழுதிய கடித்த்தில், ‘உங்கள் கடையில் ஹிந்து மத பொருட்கள் விற்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். தற்போது இருப்பவைகளை உடனடியாக நீக்க வேண்டும். அல்லா கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றட்டும்’ என மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த காசிம் அலி, இங்கு அனைத்து மதத்தினருக்கான பொருட்களும் 27 ஆண்டுகளாக விற்கப்படுகின்றன. நாட்டில் நிலவும் சகோதரத்துவத்தை சீர்குலைக்க வேண்டாம் என கூறியதுடன், சர்ச்சைக்குரிய கடிதம் எழுதியதற்கு மன்னிப்பு கோரவும்  கேட்டுக்கொண்டார். மேலும், ஜமாத்தின் தலைவர் தன் சொந்தப் பகையை தீர்த்துக்கொள்ள இப்படி செய்வதாக குற்றம் சாட்டினார். அவருடைய இந்த செயலுக்கு அங்குள்ள ஹிந்துக்களும், சனாதன் தர்ம மகா சபை உள்ளிட்ட அமைப்புகளும் பாராட்டு தெரிவித்தன.