மீண்டும் பிரதமரானார் சர்மா ஒலி

கடந்த திங்களன்று, பிரதம மந்திரி கே.பி. சர்மா ஓலி, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். நேபாள ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரி, வியாழக்கிழமைக்குள் புதிய அரசு அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிகளைக் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷெர் பகதூர் டியூபா, பிரதமர் பதவிக்காக முயற்சித்தார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) தலைவர் புஷ்பா கமல் தஹாலின் ஆதரவையும் பெற்றிருந்தார். ஆனால் அக்கட்சியின் மற்றொரு தலைவர் மகாந்தா, இதற்கு ஆதரவளிக்கவில்லை. இதனால், சபையில் பெரும்பான்மை இடங்களைப் பெறத் தவறிவிட்டது அவரது கட்சி. வேறு வழியின்றி ஒலியை மீண்டும் பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதம மந்திரி ஓலி 30 நாட்களுக்குள் சபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், இது தோல்வியுற்றால் 76 (5) வது பிரிவின் கீழ் அரசு அமைப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்படும். அப்படியும் புதிய அரசு அமையாவிட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் அறிவிக்கப்படும்.