கிரிப்டோ கரன்சி நிவாரண நிதி

கொரோனாவின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள பாரதத்திற்கு, உலக நாடுகள் பல தன்னிச்சையாக உதவிக்கரம் நீட்டியுள்ளன. மேலும் பெரும் நிறுவனங்களான கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி, டுவிட்டர் ரூ.110 கோடி அறிவித்துள்ளன. பல புலம் பெயர்ந்த பாரத தேசத்தவர்களும் தங்களால் முடிந்தததை செய்து வருகின்றனர். இந்நிலையில் ‘எதிரியம்’ என்ற கிரிப்டோ கரன்சி இணை நிறுவனர் விட்டாலிக், 500 எதிரியம், 50 டிரில்லியன் ஷிபு இனு நாணயங்களை நன்கொடையாக அளித்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 7,300 கோடி ரூபாய். பாரதம், கிரிப்டோ கரன்சி நன்கொடைகளை பெறுவதற்காக கோவிட் கிரிப்டோ நிவாரண நிதி என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த நிதிக்கு எதிரியம், பிட்காயின், டோஜ், ட்ரான், காஸ்மாஸ், டெசோஸ் போன்ற பல கிரிப்டோ கரன்சிகளை கொண்டு நிதியளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.