பின்னணியில் பி.எப்.ஐ

அசாமின் தல்பூர் பகுதியில் 30 ஆயிரம் ஏக்கரை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இருந்த வங்க தேசத்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் அவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கவும் அசாம் அரசு அவர்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்களுடன் பேசி சுமூக முடிவெடுத்த பிறகே ஆக்கிரமிப்புகளை அகற்றியது. ஆனால் சுமார் 10 ஆயிரம் முஸ்லிம்கள் திடீரென அங்கு வந்திருந்த 200 காவலர்கள் மீது கற்கள், கத்தி, மூங்கில் ஈட்டிகள் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த திட்டமிட்ட தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம் பயங்கரவாத ஆதரவு அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பி.எப்.ஐ அமைப்பு உள்ளது என அம்மாநில பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் சைகியா கூறியுள்ளார். டெல்லி உட்பட தேசமெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) எதிர்ப்பு வன்முறை போராட்டங்கள் நடத்தியது, பல்வேறு ஹிந்துத் தலைவர்கள் கொலை முயற்சியின் பின்னணியில் செயல்பட்டது, சட்டவிரோத பணப் பரிமாற்றம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த பி.எப்.ஐ அமைப்பின் மீது உண்டு என்பது நினைவு கூரத்தக்கது.