பக்தர்களுக்கு காகித காதி காலணிகள்

காசி விஸ்வநாதர் கோயிலில் வளாகத்தில் தோல், ரப்பர் காலணிகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் முதல் துப்புரவுப் பணியாளர்கள்வரை அனைவரும் வெறும் காலுடன் பணி செய்து வருவதை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்காக 100 ஜோடி சணல் காலணிகளை அனுப்பி வைத்துள்ளார். இதனால் அவர்கள் இனி குளிரில் வெயிலில் வெறும் காலுடன் இருக்க வேண்டியதில்லை. இந்நிலையில், இனி, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களும் வெறும் காலுடன் கோவில் வளாகத்திற்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கையால் செய்யப்பட்ட காதி காகித காலணிகளை பக்தர்கள் மற்றும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக ஜனவரி 14 (பொங்கல்) முதல் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் விற்க உள்ளது. காசி விஸ்வநாதர் வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அமைந்துள்ள காதி விற்பனை மையத்தில் இந்த காலணிகள் கிடைக்கும். ஒரு ஜோடி செருப்பு ரூபாய் 50 என்ற விலையில் விற்கப்பட உள்ளது. காகிதங்களைக் கொண்டு கைகளால் காலணிகளை தயாரிக்கும் மையமும் காசி விஸ்வநாதர் கோவிலின் தலைமை அர்ச்சகரால் திறந்து வைக்கப்படும்.