ஹிந்துக்களை குறைகூறும் காங்கிரஸ்

சத்தீஸ்கரில் உள்ள சர்குஜா மாவட்டத்தில் உள்ள குண்டிகாலா குக்கிராமத்தில் வாழும் பழங்குடியின ஹிந்து  மக்கள் மீது அருகில் உள்ள ஆரா கிராமத்தை சேர்ந்த முஸ்லிம்கள் கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரத்தில் காவல்துறையும் முஸ்லிம்களுக்கு ஆதவாக நடந்துகொண்டது. கைது செய்த முஸ்லிம்களை உடனடியாக விடுவித்தது. பதிவு செய்யப்பட்ட வழக்கில் எஸ்.சி, எஸ்.டி சட்டப்பிரிவு சேர்க்கப்படவில்லை. மைனர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் மீது ‘போக்சோ’ சட்டத்தின்படியும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. மேலும், ஹிந்துக்கள் வாய்மூடி அமைதியாக இருக்க நிர்பந்திக்கப்பட்டனர். இதனையடுத்து, ஹிந்து பழங்குடியின மக்கள், இனி முஸ்லிம்கள் கடையில் எந்த பொருளும் வாங்க மாட்டோம், அவர்களுக்கு வாடகைக்கு இடம் தர மாட்டோம், எவ்வித கொடுக்கல் வாங்கலும் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஒன்றிணைந்து சபதம் எடுத்தனர். இதனையடுத்து அம்பிகாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிந்தாமணி மகாராஜ், உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் பிரீதம் ராம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், வன்முறையில் ஈடுபட்ட முஸ்லிம்களையும், நயவஞ்சகமாக நடந்துகொண்ட காவல்துறையையும் கண்டிப்பதற்கு பதிலாக, அந்த ஹிந்துக்கள் செய்தது தவறு என குற்றம் சாட்டி தங்களது சிறுபான்மை பாசத்தை வெளிப்படுத்தினர்.