நவோதயா பள்ளி வழக்கு

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கிராமப்புற ஏழைக் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க, மத்திய அரசின் நவோதயா வித்யாலயா திட்டம் உள்ளது. பாரதத்தில் 661 நவோதயா பள்ளிகளில், 2.65 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அதில் தேர்ச்சி விகிதம் 98.50 சதவீதம். இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், சீருடை இலவசம். நுாலகம், விளையாட்டு மைதானம், ஆய்வுக் கூடங்களுடன் உண்டு, இந்த உறைவிடப் பள்ளியில் உலகத்தர கல்வி வழங்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களும் இதனை ஏற்றுள்ளன.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவக்கினால், கிராமப்புற, ஏழை மாணவர்கள் பயனடைவர். 30 ஏக்கர் நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டியது மாநில அரசின் கடமை. இதனால் தேசிய போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள முடியும் என தெரிவித்தார். இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர், ‘இது அரசின் கொள்கை முடிவு, அரசியல் உள்நோக்கில் முதல்வர் ஸ்டாலின் குடும்பம் பற்றி தவறான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. விளம்பரம் நோக்கில் மனு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

இதனையடுத்து, ‘முதல்வரின் குடும்பத்தினர் பற்றிய கருத்துக்களை நீக்கி மனுதாரர் மனு செய்யவும், நவோதயா வித்யாலயா சமிதி தலைவர், தமிழக உயர்கல்வி, பள்ளிக்கல்வி துறை செயலாலர்கள் பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு நீதிபதிகள் இவ்வழக்கை ஒத்தி வைத்தனர்