நாகாலாந்தில் தேசியகீதம்

நாகாலாந்து ஒரு பாரத மாநிலமாக 1963 டிசம்பர் 1ல் மாறிய பிறகு, சுமார் 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நாகாலாந்து சட்டமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. நாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து சட்டமன்றத்தின் 7வது அமர்வில் உரையாற்றினார். ஆளுநரின் உரையின் ஒரு பகுதியாக தேசிய கீதம் சேர்க்கப்பட்டிருந்தது. சட்டசபையில், உறுப்பினர்கள் அனைவரும் தேசிய கீதத்தை ஒருசேர பாடினர். அமைச்சரும் பா,ஜ.க தலைவருமான நாகாலாந்து மாநில பிரிவுத் தலைவர் டெம்ஜென் இம்னா அலோங், ‘மாநில சட்டமன்றம் முதன்முறையாக தேசிய கீதத்தை பாடியதன் மூலம் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. ​​இந்த நடவடிக்கை அனைத்து உறுப்பினர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது’ என்று கூறினார்.