அரசுத் துறையில் மின் வாகனங்கள்

அரசுத் துறை வாகனங்கள் அனைத்தையும், மின் வாகனங்களாக மாற்ற வேண்டும். என் அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து துறைகளில் உள்ள வாகனங்களை, மின்சார வாகனங்களாக மாற்ற உத்தரவிடுவேன். அதுபோல, மற்ற அமைச்சகங்களும் உத்தரவிட வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரிவாயுக்கு மானியம் வழங்குவதைவிட மின்சார அடுப்புகளுக்கு மானியம் வழங்கினால், எரிவாயு இறக்குமதி செலவு குறையும். மக்களும் பயனடைவர். ஒரு மின் வாகனம் வாயிலாக, மாதம், ரூ. 30,000 மீதமாகும். மின் வாகன பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும் என மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.