குப்பையில்லா நகரங்கள் தேசிய மாநாடு

‘குப்பையில்லா நகரங்களுக்கான சமூக நிறுவனங்கள்: கழிவு மேலாண்மையில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவித்தல்’ என்ற தேசிய மாநாட்டை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ‘தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம் 2.0’ நடத்தவுள்ளது. தமிழகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் இதில் பங்கேற்கின்றன. இம்மாநாட்டில் சிறப்பம்சமாக, திருச்சியில் இயங்கும் “ஷீ டீம்கள்” என்று அழைக்கப்படும் பெண்கள் தலைமையிலான சுயஉதவி குழுக்கள், குடிசைப் பகுதிகளில் சமூக கழிப்பறைகளை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும், அங்கு சுகாதார நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும் தொழில் முனைவோர் முயற்சிகளை நிறுவியுள்ளன. இக்குழுக்களின் பணி குறித்து மாநாட்டில் விளக்கப்படும்.