உக்ரைனில் சிக்கியவர்களுக்கு ஆலோசனை

உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள அரசு கட்டிடத்தை ரஷ்ய ராணுவ வீரர்கள் தகர்த்தனர். அப்போது அருகில் உள்ள மளிகைக் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்தார். இதனையடுத்து, முன்னாள் ராணுவத் தளபதி என்.சி.விஜ், ஓய்வு பெற்ற பாதுகாப்பு நிபுணர் மேஜர் ஜெனரல் பி.கே.சர்மா, உள்ளிட்ட நிபுணர்கள் அங்கு சிக்கியுள்ளவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இது ஒரு போர் சூழல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அருகில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடையே வேண்டும். தூதரக ஆலோசனைகளை கடைபிடிக்க வேண்டும். மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்வரை அங்கேயே தங்கியிருக்க வேண்டும். சொல்லப்படும்வரை வெளியில் செல்லக்கூடாது. தூதரக நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தன்னிச்சையாக பயணிப்பது, எல்லையை கடப்பது ஆபத்து. பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், போதுமான பணம், பிஸ்கெட் போன்ற தயார் நிலை உணவு, குளிர்கால ஆடை, போன்ற மிக அத்தியாவசியப் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும். உடமைகள் மீது கவனமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.