உதவும் சேவா இன்டர்நேஷனல்

உலகளாவிய தன்னார்வ தொண்டு நிறுவனமான சேவா இன்டர்நேஷனலின் ஐரோப்பா பிரிவு, ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் (உக்ரைன்) உடன் இணைந்து உக்ரைனில் சிக்கித் தவிக்கும் பாரத மாணவர்களுக்கு உதவி வருகிறது. இதுவரை 3,000 மாணவர்கள் சேவா ஐரோப்பா ஹெல்ப்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தகவல், வழிகாட்டுதல்கள், தார்மீக ஊக்கம் வழங்கப்படுகிறது. 150 மாணவர்களைக் கொண்ட குழு ருமேனிய எல்லையை சென்றடைய போக்குவரத்து, உணவு, தங்கும் வசதிகளை ஏற்படுத்தித் தந்து பத்திரமாக வெளியேற்றியுள்ளது சேவா. மேலும் எல்லை கடந்து செல்லும் மாணவர்களுக்கு ருமேனியாவில் உணவு வழங்குவது, முகாம் ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. உக்ரைனில் இருந்து வெளியேற உதவிய சேவா இன்டர்நேஷனலுக்கு பாரத மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மாணவி ராஜ்விந்தர் கௌர் கூறுகையில், “சேவா இன்டர்நேஷனல் 24×7 எங்களுக்கு உதவி செய்தது. அவர்கள் எங்களுக்கு உதவுவதற்காக தூங்கவில்லை. எல்லாவற்றிலும் உதவினார்கள். அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!” என்று கூறினார். உக்ரேனிய நிவாரணப் பணிகளுக்காக சேவா இன்டர்நேஷனல் 10,000 டாலர்களை அளித்துள்ளது. அங்குள்ள மக்களுக்கு உதவ சமூக ஊடகத்தில் நிதி திரட்டும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. https://twitter.com/sewausa/status/1498734330583166981?s=20&t=2um9Pn0CAjtpOXISgShnuA என்ற இணைப்பில் மேலும் தகவல் அறியலாம்.