மம்மிகள் ஊர்வலம்

எகிப்து நாட்டில் பிரமிடுகள் எனப்படும் கல்லறையில் பதப்படுத்தி வைக்கப்பட்ட இறந்த பண்டைய மன்னர்களான பாரோக்கள், மம்மிகளான இரண்டாவது செகெனென்ரே தாவோ, இரண்டாம் ராம்சே, மூன்றாம் ராம்சே, நான்காம் ராம்சே, இரண்டாம் அமென்ஹோதெப், உள்ளிட்ட 18 மன்னர்கள், 4 ராணிகள் அகியோரின் மம்மிகள் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள அல்புஸ்டாட் நகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு தனித்தனி வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. பன்டைய எகிப்திய கலாசார உடையணிந்த ஆண்களும் பெண்களும் வழிநெடுக இந்த மம்மிகளை வரவேற்றனர். எகிப்தின் அதிபர் அப்துல் பதா அல்சிசி ஊர்வலத்தினை பார்வையிட்டு மம்மிகளுக்கு மரியாதை செலுத்தினார்.