ஸ்ரீராமர் பாதை கட்டமைப்பு

ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட் என்ற இடத்திற்கு முதலில் சென்றார். இதனை நினைவுபடுத்தும் வகையில், அயோத்தியிலிருந்து சித்ரகூட்டிற்கு ராமர் சென்ற சுமார் 210 கிலோமீட்டர் பாதையை, ‘ராம் வன் காமன் மார்க்’ என்ற பெயரில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ‘அயோத்தியிலிருந்து, பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜெத்வாரா, ராஜாபூர் வழியாக இந்த தனிப்பாதை சித்ரகூட்டிற்கு செல்லும் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தில் இருந்துவரும் செய்திகள் தெரிவித்தன. இதேபோல மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.கவைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வரான காங்கிரசைச் சேர்ந்த பாஹெல் ஆகியோரும், தங்கள் மாநிலங்களில் ராமர் காட்டுக்கு சென்ற பாதையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.