நடமாடும் ஆக்ஸிஜன் இயந்திரங்கள்

பாரதம் முழுதும், பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென பலமடங்கு பெருகியதால் அவர்களுக்கு வழங்கத் தேவையான ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க ஏதுவாக, முப்படைகளுக்கு அவசரகால நிதி பயன்பாடு அதிகாரத்தை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் வழங்கினார். இதனையடுத்து, ஜெர்மனியில் இருந்து நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை விமானம் வாயிலாக எடுத்து வர ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு மணி நேரத்தில், 2,400 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 23 இயந்திரங்கள் வாங்கப்படுகின்றன. இவை இன்னும் ஒரு வாரத்தில் வந்து சேரும்.இவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக எடுத்துச் செல்ல முடியும். முதற்கட்டமாக ஆயுதப்படை மருத்துவ சேவை மையங்களில் இவை நிறுவப்படும். வெளிநாடுகளில் இருந்து, மேலும் பல ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை வாங்கும் திட்டம் உள்ளது. அவசியமெனில், இதுபோல, பல ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களும் வாங்கப்படும்.