கொரோனா அச்சம் வேண்டாம்

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன், ‘கொரோனா பரவலை கண்டு மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். தமிழகத்தில் 95,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு, கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். மக்கள் தாங்களாகவே மருந்துகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் வாங்க வேண்டாம். கொரோனா தடுப்புக்கு கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தொற்று பாதித்த அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படாது. கூடுதலாக 2,400 ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்த முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு இல்லை. ஆயிரக்கணக்கான படுக்கைகள் காலியாக உள்ளன. அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் கொரோனா பரவலை பெருமளவுக்கு குறைக்கலாம்’ என தெரிவித்தார்.