அறிக்கையை தடுத்த மமதா

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் குறித்து அம்மாநில உள்துறை செயலாளர், டி.ஜி.பி மற்றும் காவல் ஆணையர்களிடம் ஆளுனர் அறிக்கை கேட்டிருந்தார். ஆனால் அந்த அறிக்கைகள் அவருக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து ஆங்கில நாளிதழான இந்துஸ்தான் டைம்ஸுக்கு பேட்டியளித்த ஆளுனர், ‘அந்த அறிக்கைகளை தனக்கு அனுப்ப வேண்டாம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக உள்துறை செயலாளர் என்னிடம் தெரிவித்தார். தற்போது, மேற்கு வங்கத்தில் அதிகாரத்துவம் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது, அதிகாரிகள்கூட அரசியல் கட்சியினர் போல செயல்படுகின்றனர். தேர்தலுக்கு பிந்தைய வன்முறையை தடுக்க மாநில அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், இது மமதாவின் மாநில அரசால் நேரடியாக நடத்தப்படும் பயங்கரவாதம் என்ற பரவலான மக்களின் குற்றச்சாட்டை மொத்தமாக தள்ளுபடி செய்வதும் கடினம். மாநிலத்தில் தற்போதைய ஆட்சி என்பது அரசியலமைப்பு விதிகள், பரிந்துரைகள் மற்றும் சட்டங்களில் இருந்து பெரிதும் விலகியுள்ளது. என தெரிவித்துள்ளார்.