சொகுசாகப் போராடும் விவசாய தலைவர்கள்

கடந்த ஆண்டு மத்திய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100 நாட்களுக்கு மேலாகத் தொடர்கிறது. காலிஸ்தானிய பயங்கரவாதிகள் தலைமையில், இந்தப் போராட்டங்களில் விவசாயிகளாகத் தங்களைப் பொய்யாக அடையாளப்படுத்திக் கொள்ளும் கமிஷன் ஏஜெண்டுகள் பொது இடங்களை ஆக்கிரமித்து போராடுகின்றனர். காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு ஆதரவளிக்கின்றன. இந்நிலையில், பல்பீர் சிங் ராஜேவால், குல்வந்த் சிங் சந்த் எனும் இரண்டு விவசாய தலைவர்கள், குண்ட்லி எனும் இடத்தில் உள்ள ‘டி.டி.ஐ க்ளூப் ரிட்ரீட்’ எனும் மூன்று நட்சத்திர விடுதியில் தங்கி இந்தப் போராட்டத்தை வழிநடத்துகின்றனர். ஒருவர் ஹோட்டலில் தங்குவதற்கான செலவு மட்டும் இதுவரை ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஹோட்டலில் அவர்களின் செலவுகள் அனைத்தையும் ஹோட்டலின் உரிமையாளர்களுல் ஒருவரான ரவீந்திர தனேஜா ஏற்றுக்கொண்டுள்ளார். ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் மானேசர் நில முறைகேட்டில், ரவீந்திர தனேஜா உட்பட 13 கட்டுமான நிறுவனத்தினர் ரூ. 1500 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக கடந்த ஆண்டு பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குநரகம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.