நெல்லையப்பர் கோயிலில் பாதுகாப்பு குறைபாடு

தைப்பூச தினமான நேற்று, திரு நெல்வேலியில் உள்ள உலகப்புகழ் பெற்ற நெல்லையப்பர் திருக்கோயிலில், சுமார் 11:30 மணி அளவில், கருப்பு நிற பர்தா உடை அணிந்த நபர் கோவிலுக்குள் நுழைந்து மூலஸ்தானம் முன்பு வரை சென்று பல்வேறு இடங்களை படம் பிடித்துள்ளார் என கூறப்படுகிறது. அந்த நபரிடம் இதுகுறித்து கோயில் பணியாளர்கள் யாரும் அவர் யார், எதற்கு வந்தார், ஏன் படம் பிடிக்கிறார் என்று எந்த கேள்வியும் கேட்கவில்லை. பர்தாவுக்குள் இருந்தது ஆணா, பெண்ணா, அவர் எதற்காக வந்தார், என்ன கொண்டுவந்தார், கோயிலில் என்ன செய்தார், எதை கொண்டு சென்றார் என்ற எதுவும் யாருக்கும் தெரியவில்லை. இந்த சூழலில், இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக அங்கு இந்து முன்னணி அமைப்பினர் விரைந்தனர். அவர்கள் வந்ததும் வெளியில் வந்த அந்த பர்தா அணிந்த நபர் நிற்காமல் ஓட்டம் பிடித்தார். இது, நெல்லையப்பர் கோயிலில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டையே காட்டுகிறது. இதுகுறித்து விரைந்து தக்க விசாரணை நடத்த வேண்டும் என கோயில் நிர்வாகத்திடம் இந்து முன்னணி நிர்வாகிகள் முறையிட்டனர்.