எருதாட்டத்துக்கு தடை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் விழாவையொட்டி எருது விடும் விழா, எருதாட்டம் ஆகியவை நடைபெறும். சமீபத்தில் எருது விடும் விழாவை தடை செய்து அதனை தி.மு.க அரசு வேண்டுமென்றே பிரச்சனையாக்கியது. இந்த சூழலில் அடுத்ததாக, எருதாட்டத்திற்கும் தமிழக அரசு தனது காவல்துறை மூலமாக தடை செய்துள்ளது. எருதாட்டத்தில், கிராம கோயிலின் காளைகளுக்கு பூஜைகள் செய்து, ஊரில் உள்ள பொது மைதானத்துக்குக் காளைகள் அழைத்து வந்து, காளையின் இருபுறமும் வடக்கயிறு கட்டிவிடுவார்கள். பின்னர், காளைகளின் முன்பு பொம்மைகளைக் காட்டி காளைகளை உற்சாகப்படுத்தி இளைஞர்கள் விளையாடுவார்கள். இதில் காளைகளுக்கு விளையாட்டு மட்டுமே காண்பிக்கப்படும், காளைகளை ஓடவிடப்படுவது இல்லை. இதை குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லாமலோ அல்லது ஹிந்து பண்டிகைகள், விழாக்களை தடை செய்யும் நோகிலோ தமிழக அரசு இதுபோல தொடர்ந்து தடைகளை விதித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே, போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ் குப்பம் கிராமத்தில் இந்த எருதாட்டத்துக்கு காவல்துறை அனுமதி தராததால், கிராம மக்கள் ஒன்றிணைந்து காளைக்குப் பதிலாக, ஊர்த் தலைவரின் இடுப்பில் கயிறைக் கட்டி கோயிலை வலம் வந்து அம்மனுக்குப் பூஜை செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. “பாரம்பரியமாக நடத்தப்படும் எருதாட்டம் நடத்தவில்லை என்றால் ஊருக்கு தீங்கு ஏற்படும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. எனவே, ஊர் தலைவர் மூலம் வழக்கமான பூஜைகளைச் செய்து வழிபட்டோம்” என ஆந்த கிராம மக்கள் கூறினர்.