டாக்டர். கிருஷ்ணசாமி பேச்சு

விருது நகர் ராஜபாளயத்தில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி பேசுகையில், நாம் ஹிந்துக்கள் என்பதை மறந்து விடக்கூடாது. உலகின் முன்னோடியான, பழமையான மதம் ஹிந்துமதம்.  இம்மதத்தில் பிறந்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஏழு ஜாதிகளை உள்ளடக்கிய தேவேந்திரகுல வேளாளர், பட்டியலினத்தில் இருந்ததால்… பலர் தாழ்வு மனப்பான்மையில் இருந்தனர். இதனால் வேறு மதங்களுக்கும் மாறினர். நாம் பட்டியலினத்தில் இருந்து வெளியேறியதால், இப்போதுதான் நமக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆம்… நாம் ஹிந்துக்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இனி நம் இனத்தில் ஒருவர்கூட பிற மதத்திற்கு செல்லக்கூடாது என்பதில் உறுதியுடனும், சத்திய பிரமாணம் செய்து கொண்டும், கடைசி மூச்சு உள்ளவரை பின்பற்ற வேண்டும். நாம் இனி ஹிந்து. இதை சிலர் ஏற்காவிட்டாலும் கவலைப்படாதீர்கள். இழிவாக பேசினாலும் பொறுத்துக் கொள்ளுங்கள். வம்புக்கு இழுத்தாலும் பொறுமை காக்க வேண்டும். அவர்களுடன் சரிக்கு சரியாக சண்டை போடக்கூடாது. இந்நிலை காலப்போக்கில் சரியாகி, சமமாகிவிடும் என்றார்.