கோயிலை இடித்த நெடுஞ்சாலைத்துறை

திருப்பூர், வெள்ளக்கோயில், அய்யம்பாளையத்தில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது ஏரி கருப்பண்ண சாமி கோயில். போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு என்பதை காரணமாக கூறி 60 ஆண்டுகள் பழமையான இக்கோயிலை, நெடுஞ்சாலைத் துறையினர் இடித்தனர். அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் கோயில் இடிக்கப்பட்டதாக கோயிலின் செயல் அலுவலர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ‘ஊர் பொதுமக்கள் சம்மதத்திற்குப் பிறகே, 15 நாட்களுக்கு முன் ஆகம விதிப்படி யாகம், சிறப்பு பூஜைகள் செய்து கோயில் கீழ்புறம் தோட்டத்தில் கட்டடம் கட்டி சிலைகள் பாலாலயம் செய்து வைக்கப்பட்டன. அதன் பிறகு கோயிலை அகற்றினோம், கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பது எங்களுக்குத் தெரியாது’ என்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டபொறியாளர் தெரிவித்துள்ளார்.