கெஜ்ரிவாலின் ஆக்ஸிஜன் கெடுபிடிகள்

டெல்லியில், கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு ஆக்ஸிஜன் மறு நிரப்புதல் மையங்கள்தான் சமய சஞ்சீவனியாக கைகொடுத்து வருகின்றன. ஆனால், சமீபத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அரசு, உரிமை பெற்றுள்ள ஆக்ஸிஜன் மறு நிரப்புதல் மையங்களில் மட்டுமே ஆக்ஸிஜன் நிரப்பவேண்டும் என உத்தரவிட்டதுடன் மற்ற மையங்களை வலுக்கட்டாயமாக மூடிவிட்டது. அம்மையங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை வெளியேற்றி சிலிண்டர்களை எடுத்து சென்றதுடன் அந்த மையங்களுக்கு சீல் வைத்துவிட்டது. கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ள 13 மறு நிரப்பு மையங்களின் தொலைபேசி எண்களும் வேலை செய்யவில்லை. இதனால் அங்கு மக்கள் திண்டாடுகின்றனர்.