ஹிந்து என்றால் இளக்காரமா?

தூய இருதயர் பள்ளியின் ‘கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு என் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என்பதால் நான் சித்திரவதை செய்யப்பட்டேன். என்னால் அந்த சித்திரவதையை இனியும் அனுபவிக்க முடியாது’ என வாக்குமுலம் அளித்த 17 வயதான பள்ளி சிறுமியின் தற்கொலை, பா.ஜ.க, சில ஹிந்து அமைப்புகளின் கடும் முயற்சியால் வெளியுலகிற்கு தெரியவந்தது.

ஆனால், அதனை மறைக்க கிறிஸ்தவ அமைப்புகளும் தமிழக அரசும், காவல்துறையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமான முயற்சிக்கின்றன. இவ்வழக்கை சி.பி.ஐ’யிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கிறிஸ்தவ அமைப்புகளை காப்பாற்ற, தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது தி.மு.க அரசு. நல்லவேளையாக உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரிக்கத் தடையில்லை என தீர்ப்பளித்தது.

இந்த பிரச்சனைகல் தமிழகத்தில் மட்டும்தான் என்பது கிடையாது. இதுபோன்ற பல சம்பவங்கள் பாரதம் முழுவதும், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இடதுசாரிகளின் துணை அமைப்புகள், சிறுபான்மையின அமைப்புகள், பிரிவினைவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் என பலரால் திட்டமிட்ட வகையில் கையாளப்படுகின்றன. உதாரணமாக…

2018ல் கதுவா பலாத்கார வழக்கில், ‘ஆசிஃபாவுக்கு நீதி வேண்டும்’, ‘கோயில் பூசாரி உட்பட ஹிந்து ஆண்களால் முஸ்லிம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்’ என்று வெளிப்படையாகவே பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது. அரசியல்வாதிகளும் உள்ளூர் ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் இதனை பல நாட்கள் விவாதித்தன. ஆனால்,அதே  2018 முதல் தற்போது வரை ஹிந்து பெண்கள், குழந்தைகளை முஸ்லிம்கள் கற்பழித்த, ஏமாற்றிய, லவ் ஜிஹாத் செய்த நூற்றுக்கணக்கான வழக்குகள் குறித்து யாருக்குத் தெரியும்?

ரோஹித் வெமுலாவின் தற்கொலைக் கடிதம் யாரையும் குற்றம் சாட்டவில்லை என்ற போதிலும், அவரது தற்கொலை பல வாரங்களாக கொதிநிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், எஸ்.ஆர்.எம் உள்ளிட்ட பல கல்லூரி மாணவர்கள், ஹிந்து மாணவர்களின் தற்கொலை வழக்குகள் ஏன் மறைக்கப்பட்டன?

பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஹத்ராஸ் பலாத்கார வழக்கு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ராஜஸ்தான் அல்வார் கற்பழிப்பு வழக்கு, தமிழகத்தில் தி.மு.க ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல பாலியல் பலாத்கார வழக்குகள் மூடிமறைக்கப்படுகின்றன. கிறிஸ்தவ பாதிரிகள் செய்த பாலியல் வன்கொடுமைகள், முஸ்லிம் மதகுரு, மௌலானாக்கள் நடத்திய பலாத்கார சம்பவங்கள் குறித்து எந்த கட்சியாவது, ஊடகமாவது விவாதித்துள்ளதா?

ஆசாராம் பாபு மற்றும் பிஷப் பிராங்கோ முலக்கல் ஆகியோர் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். கிட்டத்தட்ட ஒரேமாதிரியான இந்த வழக்குகளில், 2018 முதல் ஆசாராம் பாபு சிறையில் இருக்கிறார். ஆனால், பிராங்கோ? கேரள அரசும், மெத்தனமான நீதித்துறையும் அவர் சுதந்திரமாக நடமாடத்தானே உதவியுள்ளது?

இங்கு, பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் மதம் முக்கியமானது. பட்டியலின அல்லது பழங்குடியினர் என்ற கோணம் இல்லாவிட்டால் குற்றத்தால் பாதிக்கப்பட்ட ஹிந்துவின் வாழ்க்கை அவர்களுக்கு அற்பமானது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுபான்மையினர், பாதிக்கப்பட்டவர் பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் என்றால்? அவர்களுக்கு பட்டியலின பழங்குடியின உயிர்கள் முக்கியமில்லை. கேரளாவின் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கு, தஞ்சாவூர் ராமலிங்கம் கொலை வழக்கு என பல நூறு உதாரணங்களை இதற்கு பட்டியலிட முடியும்.

இவர்களை பொறுத்தவரை, ஆசிஃபா, ஜுனைத், பெஹ்லு கான், அக்லாக் போன்றோருக்காக மட்டுமே நாம் வெட்கித் தலை குனிய வேண்டும். ஆனால், லாவண்யா, ராமலிங்கம், பால்கரில் காவல்துறையினரின் உடந்தையுடன் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட துறவிகள்கள், திட்டமிடப்பட்ட டெல்லி வன்முறை கலவரத்தில் உயிர் விட்ட ரத்தன் லால், டெல்லி காவலர், உளவுத்துறை அதிகாரி அங்கித் ஷர்மா ஆகியோர் முஸ்லிம் கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு நாம் வெட்கப்பட வேண்டியதில்லை.

கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தாலும், சேலம் ஆடிட்டர் ரமேஷ், பாடி சேகர் உள்ளிட்ட ஏராளமான ஹிந்து அமைப்புகளின் பிரமுகர்கள் கொல்லப்பட்டதற்கோ அல்லது ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கோ அல்லது கேரளாவில் சஞ்சித், ரஞ்சித் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான ஹிந்து அமைப்பினர் கொல்லப்பட்டதற்கு எல்லாம் நீங்கள் அனுதாபப்பட்டால் நீங்கள் ஹிந்து மத வெறியர் என முத்திரை குத்தப்படுவீர்கள். மாறாக, கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகள், முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையாளிகள், ஹிந்து அமைப்பினரை கொன்றவர்கள் அனைவரையும் வெளியே விட வேண்டும், அவர்கள் தியாகிகள் என்று நீங்கள் சொன்னால், நீங்கள் மதசார்பின்மைவாதி, முற்போக்கு சிந்தனையாளர், சமூக செயற்பாட்டாளர் என புகழப்படுவீர்கள்.

கங்காராம் சௌஹான் தனது டீனேஜ் மகளை முஸ்லிம்கள் கடத்திச் சென்றதாக புகார் அளித்ததால் கொல்லப்பட்டார். துருவ் தியாகி தனது மகளுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார். இதுபோன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் மதமும் குற்றவாளிகளின் மதமும் இவர்களுக்கு முக்கியம்.

பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷின் கொலைக்கு எரிமலையை பற்றவைத்த இவர்கள், கேரளா, திரிபுரா, தமிழகம், மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடதுசாரிகள் அல்லாத பத்திரிக்கையாளர்கள், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தொண்டர்கள் பற்றி கவலைப்படவில்லை. இவர்களை பொறுத்தவரை ஒரு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரின் உயிர் என்பது ஒரு கம்யூனிஸ்ட்டு, காங்கிரஸ், தி.மு.கவினரின் உயிருக்கு சமமானதல்ல. பாதிக்கப்பட்டவரின் அரசியல், மத சார்பும் இங்கு இவர்களுக்கு முக்கியமானது.

ஊடகங்களில் இதுகுறித்த செய்திகளை கம்யூனிச, லிபரல் கும்பல்கள் கட்டுப்படுத்துகின்றன. இதனால் லாவண்யா, ராமலிங்கம், துருவ் தியாகி உள்ளிட்ட எண்ணற்ற ஹிந்துக்களின் கதைகள் யாருக்கும் தெரியாமலே போகின்றன.

மதிமுகன்