முதல்வரின் பரிந்துரை நிராகரிப்பு

மேற்கு வங்க சட்டசபையை, மாநில அரசின் பரிந்துரையை அடுத்து, பிப்ரவரி 12 முதல் முடக்கி வைத்து ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டு இருந்தார். தற்போது, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி, மார்ச் 7ல் சட்டசபை கூட்டத் தொடரை துவக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பினார். ஆனால் அதனை ஆளுநர் ஜகதீப் திருப்பி அனுப்பிவிட்டார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஆளுநர், ‘மாநில அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. அதனால், அரசியலமைப்பு சட்டப்படி அதனை ஏற்காமல் திருப்பி அனுப்பினேன்’ என தெரிவித்தார்.