ஊடுருவும் ரோஹிங்கியாக்கள்

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வினோத் பன்சால், சமீபத்தில் சண்டிகருக்கு விஜயம் செய்தபோது, அம்மாநில ​​உள்துறை அமைச்சகத்திடம், ‘ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் ஹரியானாவில் சட்டவிரோதமாக ஊடுருவி வசிக்கின்றனர் என கூறப்படுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கை உண்மையில் லட்சங்களில் இருக்கும். கிராமப்புறங்கள், காலனிப்பகுதிகளில் அவர்கள் அதிகம் ஊடுருவியுள்ளனர். மேவாட் பகுதியில் மட்டும் சுமார் 600 ரோஹிங்கியா முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் ஜம்மு-காஷ்மீர், ஹைதராபாத், உ.பி., ராஜஸ்தான், டெல்லி என ஒவ்வொரு மாநிலமாக பரவி வருகின்றனர். இது தேச பாதுகாப்பிற்கும் சட்டம் ஒழுங்கிற்கும் மிகவும் அச்சுறுத்தலான விஷயம். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.