சர்வதேச குடிமக்கள் தூதர்

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைகழகத்தின் ஆன்மிகம் சொற்பொழிவு சேவை மையம் ‘சர்வதேச குடிமக்களின் துாதர்’ என்ற கௌரவ விருதை இந்தாண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அளவில் சகோதரத்துவம், ஒற்றுமை, மனித நேயம், அமைதிக்கு பாடுபடுவோருக்கு இவ்விருது வழங்கப்படும். இந்த வருடம் வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ‘சர்வதேச குடிமக்களின் துாதர்’ விருது வழங்கப்படுவதாக நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறும்பொழுது, ‘ஒருவருக்கு ஒருவர் தொடர்பின்றி இருப்பதுதான் பிரச்சனைகளுக்கு முதல் காரணம். அடுத்ததாக நம்பிக்கையின்மை. இவைகளை சரி செய்தால் எந்த பிரச்னைக்கும் தீர்வு காணலாம் என்றார்.