இடைத்தரகர்கள் கைது

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பதிவில், ‘வருவாய்த்துறை அலுவலகங்களில் உள்ள சில தரகர்கள் பொதுமக்களை எமாற்றுவது, அதிக பணம் பறிப்பது உள்ளிட்ட பல மோசமான, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகளுடனான மக்கள் சந்திப்பில், இடைத்தரகர்கள் அகற்றப்பட வேண்டும். மக்கள் தங்கள் நிலம் தொடர்பான வேலைகளை எந்தத் தொந்தரவும் இல்லாமல் நேரடியாக செய்ய அதிகாரம் அளிக்க வேண்டும். முதற்கட்டமாக இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 453 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நில வருவாய் அலுவலகங்களில் மக்களை துன்புறுத்துபவர்கள் மீது மாநில காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்’ என தெரிவித்துள்ளார்.