பேராசிரியர் தரும் வாழ்க்கை பாடம்

கேரளாவில் நியூ மேன் என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டி.ஜே ஜோசப், கடந்த 2010ல் தனது கல்லூரி தேர்வுக்காக ஒரு கேள்வித்தாளை உருவாக்கினார். அதில், அவர் கேட்ட ஒரு கேள்வி ஒன்று அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது.

முஸ்லிம்களால் நிகழ்த்தப்படும் போதைப்பொருள் ஜிஹாத் எனப்படும் ‘நார்கோ ஜிஹாத்’ குறித்த ஒரே ஒரு கேள்விக்காக அவரை முஸ்லிம் பயங்கரவாதிகள் அடித்து துன்புறுத்தி கையை வெட்டினர். அவரது மனைவி இதனால் தூக்குப்போட்டு இறந்தார். அவரது குடும்பத்தினர் தொடர்ச்சியாக மிரட்டப்பட்டனர். அவரது வேலை பறிபோனது.

இது குறித்து அவர் எழுதியுள்ள ‘அட்டுப்போகாத ஊர்மகள்’ என்ற மலையாள புத்தகம் 2020ல் வெளியானது. பரபரப்பாக விற்பனையான அந்த புத்தகத்தின் ஆங்கில மொழியாக்கமான ‘A Thousand Cuts: An Innocent Question and Deadly Answers’ என்ற புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது.

அவரது புத்தகத்தில் அவர், மத நல்லிணக்கம் ஒரு வலைப்பூவைப் போல தற்காலிகமானது. அனைத்து சர்ச்சைகளுக்கும் மத அடிப்படைவாதமும், பயங்கரவாதமும்தான் முக்கிய காரணமாக உள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்பு என் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இன்று உலகில் நடக்கும் நடப்புகளுக்கும் அதன் சூழல்களுக்கும் பொருத்தமானவையாக உள்ளது.

மத பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் என் கதையை அறிந்து கொள்ளும்போது, ​​அவர்களில் சிலருக்காவது அதனை மாற்றிக்கொள்ளும் எண்ணம் ஏற்படும் என்று நம்புகிறேன். தானாக எந்த தவறும் செய்யாமல் மற்றவர்களால் வாழ்வில் கடுமையான பின்னடைவைச் சந்தித்தவர்களுக்கும் உயிர் பிழைக்க போராடுபவர்களுக்கும் என் வாழ்க்கை ஒரு நேர்மறையான ஆதரவை அளிக்கும் என்று நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.