பாரத முன்னேற்றம் ஐ.நா ஆய்வறிக்கை

டிஜிட்டல், நிலையான வர்த்தக வசதி குறித்த ஆசிய பசிபிக் பகுதிக்கான ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணையமான UNESCAP, 143 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆண்டு இதில், பாரதம் 90.32 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளது. முன்னதாக கடந்த 2019ல் இது 78.49 சதவீதமாக இருந்தது. அந்த கணக்கெடுப்பில், பாரதம் வெளிப்படைத்தன்மையில் 100 சதவீதம் பெற்றுள்ளது. (2019ல் இது 93.33 சதவீதம்), நிறுவன ஏற்பாடு, ஒத்துழைப்புகளில் 88.89 சதவீதம் (2019ல் இது 66.67 சதவீதம்), காகிதமில்லா வர்த்தகத்தில் இந்த ஆண்டில் 96.3 சதவீதம் (2019ல் இது 81.48 சதவீதம்), நாடுகளை தாண்டிய வர்த்தகத்தில் 66.67 சதவீதம் (2019ல் இது 55.56 சதவீதம்) என கணக்கிடப்பட்டுள்ளது. பாரதத்தின் ஒட்டுமொத்த மதிப்பெண்கள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பான OECDயில் உறுப்பினராக உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, நார்வே, பின்லாந்து நாடுகளைவிடவும், தெற்கு மற்றும் தென்மேற்கு ஆகிய நாடுகள், ஆசிய பசிபிக் நாடுகள் ஆகியவற்றை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.