பொய் செய்தி வெளியிட்ட இந்தியா டுடே

தற்போது ஹரித்வாரில் நடைபெற்றுவரும் மகா கும்ப மேளா, கொரோனா பரவ உதவும் வகையில் ஒரு வேகமான பரப்பாளராக (சூப்பர் ஸ்பிரெட்டர்) இருக்கிறது என மத்திய அரசு எச்சரித்துள்ளதாக கடந்த ஏப்ரல் 6ல் இந்தியா டுடே ஒரு பொய்யான குற்றச்சாட்டை கட்டுரையாக வெளியிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு அப்படி தெரிவிக்கவில்லை என்பதுடன் நிகழ்ச்சிக்கு ஒரு மாதம் முன்பே, கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வருபவருக்கே அனுமதி, வழக்கமாக மூன்று மாதங்களுக்கு மேல் நடைபெறும் கும்பமேளா இந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக ஒரு மாதம் மட்டுமே நடைபெறும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து அதனை சிறப்பாக மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இது குறித்த உண்மைகள் வெளியானதும், உடனடியாக தனது இணையத்தில் இந்த கட்டுரையை மாற்றியும் திருத்தியும் தற்போது வெளியிட்டுள்ளது இந்தியா டுடே. ஆனால், அதிலும் சூசகமாக தன் கருத்தை திணித்துள்ளது.