குரூர பெண் எழுத்தாளர்

பிஜாப்பூர்-சுக்மா மாவட்டத்தில், ஒரு தேடுதல் வேட்டைக்காக பயணித்துக் கொண்டிருந்த சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினர் வாகனங்கள் மீது, 400 கம்யூனிச நக்சல்கள் பயங்கரவாதிகள் குழு ஒன்று இயந்திர துப்பாக்கிகள், ஐ.இ.டி, ராக்கெட் லாஞ்சர்களைப் பயன்படுத்தி நடத்திய திடீர் தக்குதலில் 22 வீரர்கள் வீரமரணமடைந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர், சிலர் கடத்தப்பட்டனர். அவர்களது ஆயுதங்களும் போர் தளவடங்களும் களவாடப்பட்டன. இதில் ஒரு வீரரை கொல்வதற்கு முன் அவரது கையை வெட்டி வீசியுள்ளனர் இந்த கம்யூனிச பயங்கரவாதிகள்.

சி.ஆர்.பி.எப் வீரர்களின் இந்த ஒப்பற்ற தியகத்தை அவமதித்து, ‘சம்பளம் வாங்கிக்கொண்டு கடமை செய்யும் இவர்களின் உயிரிழப்பை தியாகம் என்று சொல்ல முடியாது. இதனை ஊடகங்கள் உணர்வுபூர்வமாக்க வேண்டாம்.’ என தனது முக நூலில் பதிவிட்டார் அசாம் எழுத்தாளரான சிகா சர்மா. இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உமி தேகா பருவா, கங்கனா கோஸ்வாமி எனும் கௌஹாத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், டிஸ்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ஐ.பி.சி 124 ஏ கீழ் சிகா சர்மா மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.