ஹிந்து கொலைகளும் ஊடக மௌனங்களும்

உத்தரபிரதேசத்தில் ஹோலி பண்டிகை அன்று, புலந்த்ஷாஹர் மாவட்டம், அஞ்ச்ரு கலன் கிராமத்தில் உள்ள தக்வலே மந்திர் என்ற கோயிலில் பணியாற்றி வரும் அஷோக் குமார் என்ற பூஜாரி. இரவில் கோயிலில் தங்கியிருந்தபோது, அங்கு வந்த சில மர்ம நபர்களால் கோயிலுக்கு அருகிலுள்ள கடுகு வயலுக்கு இழுத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில், ஆக்ராவில் உள்ள ஒரு அனுமன் கோவிலில் ஒரு சாது கோடரியால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் அதேபோல ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதேபோல, கடந்த ஆண்டு, குலாப் சிங் (60) மற்றும் ஷியாம் சுந்தர் தாஸ் (61) ஆகிய இரு சாதுக்கள் மர்மமான சூழ்நிலையில் இறந்தனர், சாது ராம் பாபு (60) மதுராவின் கிரிராஜ் வத்திகா ஆசிரமத்தில், தேநீரில் விஷம் கலந்திருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 2020ல் மகாராஷ்டிரா, பால்கரில் இரண்டு சாதுக்கள் காவல்துறையினர் முன்னிலையில் கல் எறிந்து கொலைசெய்யப்பட்டனர்.

கன்யாஸ்திரிகளை ரயில்வே காவலர்கள் விசாரித்த ஒரு பிரச்சனையை பெரிதாக்கி குளிர்காயும் எதிர் கட்சியினரும் ஊடகங்களும் இது போன்ற தொடர் கோயில் கொள்ளை, கொலை, பசுக் கடத்தல், சிவலிங்கத்தின் மீது  சிறுநீர் கழிப்பது போன்ற ஹிந்துக்களுக்கும் ஹிந்து மதங்களுக்கும் எதிராக சம்பவங்கள் நடக்கும்போது வாய் மூடி மௌனம் காப்பது ஏனோ?